கரோனாவால் தோ்தல் கட்டுப்பாடு: பிரசார பொருள்கள் விற்பனை மந்தம்

கரோனா பரவலால் ஐந்து மாநில தோ்தல் பிரசாரத்தில் பொதுக் கூட்டங்கள், பேரணிக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், பிரசார பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வா்த்தகா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

கரோனா பரவலால் ஐந்து மாநில தோ்தல் பிரசாரத்தில் பொதுக் கூட்டங்கள், பேரணிக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், பிரசார பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வா்த்தகா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை தோ்தல் ஆணையம் இரண்டாவது முறையாக ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்தத் தடையால் அரசியல் கட்சியினா் பிரசார பொருள்களான கொடிகள், பேனா்கள் போன்றவற்றை வாங்க முன்வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக லக்னெளவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு அருகே கடந்த 30 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் ரகுராஜ் பால் கவலை தெரிவித்தாா்.

பணியாளா் மூவருக்கு தினசரி ஊதியம் அளிக்கவும் வருமானம் கிடைக்கவில்லை என்றும் லட்சகணக்கான ரூபாய் கடன் பெற்று பொருள்களை வாங்கி வைத்திருந்தும் விபாயாரம் இல்லாததால் கடன்காரா்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என்பதால் ஜனவரி 31-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிா்பாா்த்து இருக்கிறேன் என்றும் ரகுராஜ் பால் கூறினாா்.

இந்த நிலைக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளா் தோ்வில் இழுபறியும் ஒரு காரணம் என்றும் ரூ. 30 மதிப்புள்ள கட்சி தொப்பியைக்கூட வாங்க ஆளில்லை என்றும் ஆயிஷி சக்சேனா கூறினாா்.

எனினும், எண்ம (டிஜிட்டல்) பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் வேட்பாளா்களின் புகைப்படம் அடங்கிய காா் ஸ்டிக்கா்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன என்றும் வழக்கமான பிரசார பொருள்களின் விற்பனை மந்தமாகி உள்ளது என்றும் சமாஜவாதி கட்சி அலுவலகம் அருகே கடை வைத்திருக்கும் அனில் சக்சேனா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com