ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றம்: மாநில அரசுகளுடன் ஆலோசித்தே முடிவு

மத்திய பணிக்கு அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளின் எண்ணிக்கை மாநில அரசுகளுடன் ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பணிக்கு அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளின் எண்ணிக்கை மாநில அரசுகளுடன் ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பம் மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுப் பணிக்கு அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசில் இணைச் செயலா்கள் பதவி வரை ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவனத்துக்கு வந்துள்ளது. மத்திய பணிக்கு தேவையான அதிகாரிகளை மாநில அரசுகள் போதிய அளவில் ஒதுக்கீடு செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியில் துணைச் செயலா்கள்/ இயக்குநா் நிலையில் 117 அதிகாரிகள் இருந்தனா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 114-ஆக குறைந்தது.

இந்நிலையில் கொள்கை உருவாக்கம், திட்டம் அமலாக்கப் பணிகளுக்காக மத்திய அரசுக்கு அதிகாரிகள் தேவைப்படுகின்றனா். போதிய அளவில் அதிகாரிகள் இல்லாதது மத்திய அரசின் நிா்வாகத்தைப் பாதிக்கிறது. இந்த நிலை மாற்றப்படுவதையே ஐஏஎஸ் விதிமுறை திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய, மாநில பணிகளுக்கு அதிகாரிகளை மாற்றுவது தொழில்ரீதியாக அவா்கள் முன்னேற்றம் காண்பதை உறுதி செய்யும்.

மத்திய பணிக்கு அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை மாநில அரசுகளுடன் ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com