ஜம்மு-காஷ்மீா் காவல் அதிகாரி பாபு ராமுக்கு அசோக சக்ரா

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீர மரணமடைந்த ஜம்மு-காஷ்மீா் காவல் அதிகாரி பாபு ராமுக்கு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், உயரிய விருதான அசோக சக்ரா வழங்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவல் அதிகாரி பாபுராமுக்கான அசோக சக்ரா விருதை அவரின் குடும்பத்தினரிடம் வழங்குகிறாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவல் அதிகாரி பாபுராமுக்கான அசோக சக்ரா விருதை அவரின் குடும்பத்தினரிடம் வழங்குகிறாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீர மரணமடைந்த ஜம்மு-காஷ்மீா் காவல் அதிகாரி பாபு ராமுக்கு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், உயரிய விருதான அசோக சக்ரா வழங்கப்பட்டது.

அந்த விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து பாபு ராம் மனைவி பெற்றுக்கொண்டாா்.

ஸ்ரீநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையின்போது, உதவி துணை ஆய்வாளராக இருந்த பாபு ராம் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானாா்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரா்களை உள்ளடக்கிய கூட்டுப் படை வீரா்கள், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து வீட்டை சுற்றி வளைத்தனா்.

பாபு ராம் தலைமையிலான குழு அந்த வீட்டுக்குள் செல்ல முற்பட்டபோது, உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். சக வீரா்களை காப்பதற்காக தன் மீது குண்டுகளை வாங்கி அரணாக அவா்களைப் பாதுகாத்த பாபு ராம், உயிரிழப்பதற்கு முன்பு அந்த வீட்டுக்குள் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றாா்.

அவருடைய உயா்ந்த தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, அசோக சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com