ஊழல் கரையான் போன்றது, அதிலிருந்து விடுபட வேண்டும்: பிரதமர் மோடி

முன்னதாக, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டியவை குறித்து மக்கள் பரிந்துரைக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் 'மனதின் குரல்' என்ற தலைப்பின் கீழ் பிரதமர் மோடி உரையாற்றுவார். 

அதன்படி, இந்தாண்டின் முதல் 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. அதில் பேசிய மோடி, "நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து அஞ்சல் அட்டைகள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கான கருத்துகளை என்னிடம் கூறியுள்ளனர்.

அவற்றில் பலவற்றை நான் படித்திருக்கிறேன். இந்தியாவின் எதிர்காலத்திற்கு, இன்றைய தலைமுறையினரின் சிந்தனை முக்கியமானது" என்றார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஊழல் கரையான் போன்றது, அதிலிருந்து விடுபட வேண்டும். நாடு முழுவதும் பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நமக்கு தெரியும். சாதாரண சூழ்நிலையில் அசாதாரணமான காரியங்களைச் செய்த நம் நாட்டின் புகழ்பெறாத ஹீரோக்கள் இவர்கள்.

இளம் வயதிலேயே துணிச்சலான மற்றும் உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்ட குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகள் வழங்கப்பட வேண்டும். 

'தேசியப் போர் நினைவிடத்தில்' சுதந்திரம் அடைந்ததில் இருந்து வீரமரணம் அடைந்த நாட்டின் அனைத்து துணிச்சலான வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தியாகிகளின் நினைவாக 'அமர் ஜவான் ஜோதி' ஏற்றிவைக்கப்படுவது தியாகிகளின் அழியாத் தன்மையின் சின்னம் என்று சில முன்னாள் ராணுவ வீரர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உண்மையிலேயே, 'அமர் ஜவான் ஜோதி' போல, நமது தியாகிகள் உத்வேகமும் அவர்களின் பங்களிப்பும் அழியா தன்மை கொண்டது. உங்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கண்டிப்பாக 'தேசிய போர் நினைவகத்திற்கு' சென்று வாருங்கள்.

இம்மாதிரியான முயற்சிகள் மூலம் நாடு தனது தேசிய சின்னங்களை மீண்டும் நிறுவி வருகிறது. இந்தியா கேட் அருகே உள்ள 'அமர் ஜவான் ஜோதி'யும், அருகில் உள்ள 'தேசிய போர் நினைவிடத்தில்' எரியும் ஜோதியும் ஒன்றிணைந்ததை பார்த்தோம். இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் நாட்டிற்காக உயிர்நீத்த பல நாட்டு மக்கள் மற்றும் குடும்பத்தினரின் கண்களில் கண்ணீர் வழிந்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com