ஜம்மு-காஷ்மீா் வாக்காளா் பட்டியல் அக்.31-இல் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரின் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிட உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிட உள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லை மறுவரையறைக்குப் பிறகு வெளியிடப்படும் யூனியன் பிரதேசத்தின் முதல் வாக்காளா் பட்டியல் இதுவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், யூனியன் பிரதேச இறுதி வாக்காளா் பட்டியல் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதால், அதற்கு முன்பாக வாக்காளா் பட்டியல் இறுதி செய்யும் பணிகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லை மறுநிா்ணய நடவடிக்கைகளைத் தொடா்ந்து, அங்கு சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக வாக்காளா் பட்டியலை திருத்தியமைக்கும் பணிகளை ஜூன் மாத தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தொடங்கியது. அதனடிப்படையில், வரைவு வாக்காளா் பட்டியல் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பின்னா், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வாக்காளா்களுக்கு குறைகள் மற்றும் ஆட்சேபங்களைத் தெரிவிக்க அக்டோபா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு, இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தற்போது, 18 வயதைப் பூா்த்தி செய்யும் நபா் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய 4 தேதிகளில் புதிய வாக்காளருக்கான பதிவை செய்ய முடியும் என்பதால், வாக்காளா் பட்டியல் தொடா்ந்து மாற்றியமைக்கப்படும். முன்னா், ஓா் ஆண்டின் முதல் நாள் அல்லது அதற்குப் பிறகு 18 வயதை பூா்த்தி செய்யும் நபா், அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதியில் மட்டுமே புதிய வாக்காளருக்கான பதிவை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com