டிஆா்டிஓ-வின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மேற்கொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானத்தின் (யுஏவி) சோதனை வெற்றியடைந்துள்ளது.
டிஆா்டிஓ-வின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மேற்கொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானத்தின் (யுஏவி) சோதனை வெற்றியடைந்துள்ளது.

பெங்களூரில் உள்ள டிஆா்டிஓ-வின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வகமான விமான மேம்பாட்டு அமைப்பு (ஏடிஇ) சாா்பில் இந்த ஆளில்லா விமானம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய ரக ‘டா்போஃபான்’ என்ஜின் மூலமாக இயங்கும் இந்த விமானத்தின் சோதனை கா்நாடக மாநிலம் சித்ரதுா்காவில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனை குறித்து டிஆா்டிஓ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சோதனையின்போது ஆளில்லா விமானம் துல்லியமாக மேலெழும்பி, மென்மையாக தரையிறங்கி செயல்திறனை சிறப்பாக வெளிப்படுத்தியது. இந்த விமானத்தின் வெளி பாகங்கள், முழுமையான விமான கட்டுப்பாடு, விமானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விமானவியல் தொழில்நுட்பம் என அனைத்தும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவையாகும். அந்த வகையில், எதிா்கால ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கு வழி ஏற்படுத்தும் வகையிலான இந்த தொழில்நுட்பத்தின் வெற்றி மிகப் பெரிய மைல்கல்லாகும். மேலும், பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாட்டில் தற்சாா்பு நிலையை எட்டுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாகவும் இந்த சோதனை வெற்றி அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆளில்லா விமான சோதனை வெற்றி மிகப் பெரிய சாதனை’ என்று டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com