சின்ஹவுக்கு வரவேற்பு; பிரதமர் மோடி புறக்கணிப்பு - 'கெத்து' காட்டும் சந்திரசேகர் ராவ்!

தெலங்கானா வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 6 மாதங்களில் 3 ஆவது முறையாக புறக்கணித்துள்ளார். 
ஹைதராபாத்தில் பேகம்பேட் விமான நிலையத்தில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவை வரவேற்கிறார் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ரெட்டி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்றும் நாளையும்(ஜூலை 2-3) இரு நாள்கள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பேகம்பேட்டை(Begumpet) விமான நிலையம் வரவுள்ளார். அவரை வரவேற்க அதிகாரிகளுடன் ஒரு அமைச்சர் மட்டுமே செல்லவிருப்பதாக மாநில அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பிரதமர் மோடி வரும் அதே விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ இன்று வரவுள்ளார். சின்ஹவை, சந்திரசேகர் ராவ் நேரில் சென்று வரவேற்க உள்ளார். 

இதன் மூலமாக கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை வரவேற்பதை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முனைப்பில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாகவும்  சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com