மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே,தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக ஆதரவுடன் நேற்று மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ளார். பாஜக மூத்தத் தலைவரான தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, 'சிவசேனைக்கு துரோகம் செய்தவா்கள் இப்போது ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனையைச் சோ்ந்தவா் என்று பிரசாரம் செய்கின்றனா். அவரை சிவசேனை கட்சியின் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. சிவசேனையில் இருந்து சென்ற எம்எல்ஏக்கள் மக்கள் நம்பிக்கையுடன் அளித்த வாக்குகளை வீணாக்கியதுடன், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டனா்’ என்றார்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை கட்சியில் இருந்து நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் வெளியேற்றப்படுவதாக தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரம்: ஷிண்டே அரசு மீது 4-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

மக்களைத் தாக்கும் திமுகவினர்; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்...! ராஜ்மோகன் எச்சரிக்கை

தி ஒன் ரூல் - விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் புதிய பாடல் வெளியீடு!

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK


