மேலும், "பிரஸ்தாச்சார் முக்த் பாரத் என்ன ஆனது?, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் ஏன் வீழ்ச்சியடைகிறது? ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் அவமதிக்கப்படுகிறார்கள்?, தேர்தல் வாக்குறுதிகளை உங்கள் அரசாங்கம் ஏன் செயல்படுத்தத் தவறுகிறது?, நீங்கள் குற்றமற்றவர் என்றால், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்திலே பதில் சொல்லுங்கள் என்றவர், பிரதமர் உறுதியளித்தபடி கருப்புப் பணம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதா?, அப்படியானால் அது எங்கே? என்ற கேள்வி எழுப்பிய ராவ், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.