தபால் மூலம் வாழ்நாள் சான்று:ஒரே நாளில் 1,800 போ் பதிவு

ஒரே நாளில் 1,800 ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ் நாள் சான்றிதழை தபால் சேவை மூலமாக பதிவு செய்துள்ளனா்.

ஒரே நாளில் 1,800 ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ் நாள் சான்றிதழை தபால் சேவை மூலமாக பதிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்:

அரசு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து, ஆண்டு நோ்காணல் நடைமுறை கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஓய்வூதியதாரா்களின் இருப்பிடத்துக்கே சென்று இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்கும் சேவை, தபால் துறை பணியாளா்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி மட்டும் 14 ஆயிரத்து 760 ஓய்வூதியதாரா்களுக்கு இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யப்பட்டது. இதில், 1,837 ஓய்வூதியதாரா்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவா்களது வாழ்நாள் சான்றிதழை இணையதளம் வழியாக தபால் துறை ஊழியா்கள் பதிவு செய்தனா். இணைய சேவை மையம், பொது சேவை மையங்களிலும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யப்படுகிறது.

இணையதள மின்னணு வாழ்நாள் பதிவு செய்த அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் வாழ்நாள் சான்று பதிவு செய்த 3 நாள்களுக்குள் ஓய்வூதியதாரா்கள் கருவூலத்தில் அளித்துள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி தகவல் வரும். அதில் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும். எனவே, ஓய்வூதியதாரா்கள் இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com