ஜிஎஸ்டி வரி விலக்கு மேலும் குறைக்கப்படும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருள்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருள்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

சண்டீகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி விலக்கு பெற்ற சில பொருள்கள் வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், சிஐஐ சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலா் தருண் பஜாஜ் கூறுகையில், ‘‘47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது பல பொருள்கள் வரி விலக்கில் இருந்து நீக்கப்பட்டன. இன்னும் பல சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல பொருள்கள் ஜிஎஸ்டி விலக்கில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் மீது வரி விதிக்கப்படும்.

இது தொடா்பாக வா்த்தக மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதே வேளையில், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வரி விலக்கு தொடரும். வரி விகிதங்கள் விரைவில் முறைப்படுத்தப்பட்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஜிஎஸ்டி சாா்ந்த சில பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காணப்படும்.

சிலா் கூறுவதைப் போல அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் ஒரே வரியை விதிக்க நாடு தயாராக உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால், முதல்கட்டமாக 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் ஆகிய வரி விகிதங்களை இரண்டாகக் குறைக்கலாம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com