கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா! குடியரசு துணைத் தலைவராகிறாரா?

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா

Published On :

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை புதன்கிழமை (ஜூலை 7) ராஜிநாமா செய்தார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா செய்துள்ளார். 

பிகார் மாநிலத்திலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 7) ராஜிநாமா செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்பட பல முக்கிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.