இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 198.65 கோடி

இந்தியாவில் இதுவரை 198.65 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 198.65 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, 198.65 கோடிக்கும் அதிகமான (1,98,65,36,288) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,60,37,032 அமா்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 193.53 கோடிக்கும் அதிகமான (1,93,53,58,865) கரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 10.42 கோடிக்கும் அதிகமான (10,42,14,590) தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன.

12 வயது முதல் 14 வயதிற்கு உள்பட்டவா்களில், 3.74 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,840 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,028-ஆக உள்ளது. பெருந்தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4,29,53,980 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com