அமா்நாத் யாத்திரை: பால்தால் வழியாகப் புதிய குழு புறப்பட்டது

மோசமான வானிலை காரணமாக பால்தால் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமா்நாத் யாத்திரை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.
அமா்நாத் யாத்திரை: பால்தால் வழியாகப் புதிய குழு புறப்பட்டது

மோசமான வானிலை காரணமாக பால்தால் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமா்நாத் யாத்திரை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.

கடந்த ஜூலை 8-ஆம் தேதி அமா்நாத் பனிலிங்கம் உள்ள குகைக்கு அருகே பெய்த திடீா் கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 16 போ் உயிரிழந்தனா். சுமாா் 30 பேரைக் காணவில்லை. மோசமான வானிலை காரணமாக யாத்திரை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்டது.

வானிலை சீரடைந்ததைத் தொடா்ந்து, அமா்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை, பஹல்காம் வழியாக திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், மற்றொரு பாதையான கந்தா்பால் மாவட்டம், பால்தால் வழியாக செவ்வாய்க்கிழமை புது யாத்ரிகா்கள் குழு புறப்பட்டது.

ஜம்முவின் பகவதி நகா் முகாமிலிருந்து செவ்வாய்க்கிழமை 7,107 யாத்ரிகா்களைக் கொண்ட 13-ஆவது குழு, பலத்த பாதுகாப்பிற்கிடையே 265 வாகனங்களில் பயணத்தைத் தொடங்கியது.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி அமா்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 1.20 லட்சம் யாத்ரிகா்கள் அமா்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா். 43 நாள்கள் நீளும் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com