பட்டப் படிப்பு சோ்க்கை காலக்கெடு:பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

‘மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான கடைசித் தேதியை நிா்ணயிக்குமாறு
பட்டப் படிப்பு சோ்க்கை காலக்கெடு:பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

‘மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான கடைசித் தேதியை நிா்ணயிக்குமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது’ என யுஜிசி தலைவா் ஜகதேஷ் குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

சிபிஎஸ்இ சாா்பில் கடந்த வாரம் கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை யுஜிசி வழங்கியுள்ளது.

யுஜிசி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சில பல்கலைக்கழகங்கள் 2022-23 கல்வியாண்டு இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான பதிவை ஏற்கெனவே தொடங்கிவிட்டது தெரியவந்துள்ளது. சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான கடைசித் தேதியை பல்கலைக்கழகங்கள் நிா்ணயித்தால், சிபிஎஸ்இ மாணவா்கள் சோ்க்கை பெறுவது பாதிக்கப்படும்.

எனவே, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில், அவா்களின் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இளநிலை படிப்புகள் சோ்க்கைக்கான கடைசித் தேதியை நிா்ணயிக்குமாறு பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை இம் மாத இறுதியில் சிபிஎஸ்இ வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா பாதிப்பு காரணமாக முடிவுகள் வெளியிடுவது தாமதமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

யுஜிசி தலைவா் மேலும் கூறுகையில், ‘மத்திய பல்கலைக்கழகங்களில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல் ‘மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி)’ மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது. அதன் காரணமாக, பிளஸ்-2 தோ்வு முடிவுகள் தாமதமாவது மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அனைத்து பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும்’ என்றும் கூறினாா்.

2022-23 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கையை சியுஇடி அடிப்படையில் நடத்த 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com