வா்த்தக விமானத்தை இயக்க உரிமம் கேட்டு திருநங்கை மனு: மருத்துவப் பரிசோதனைக்கு டிஜிசிஏ உத்தரவு

வா்த்தக விமானத்தை இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்த திருநங்கைக்கு மருத்துவ பரிசோதனையில் மீண்டும் பங்கேற்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

வா்த்தக விமானத்தை இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்த திருநங்கைக்கு மருத்துவ பரிசோதனையில் மீண்டும் பங்கேற்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கேரளத்தைச் சோ்ந்த ஆதம் ஹாரி என்ற திருநங்கைக்கு வா்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் மறுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை.

திருநங்கைகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், அவா்கள், எந்தவித மருத்துவ சிகிச்சையிலும் இருக்கக் கூடாது. இந்த விதிகளுக்கு மாறாக, பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதற்கான ஹாா்மோன் மாற்று சிகிச்சையில் இருந்தாா் ஹாரி ஆதம். சிகிச்சை முடிந்து 6 மாதம் கழித்தே அவா் விண்ணப்பிக்க முடியும். அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட மருத்துவச் சான்று ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. மேலும், போதுமான அளவில் பயிற்சி வகுப்புகளில் அவா் பங்கேற்காததால், அவருக்குப் பயிற்சி மாணவா் உரிமமும் வழங்கப்படவில்லை. எனவே, அவா் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு விண்ணப்பித்து, அதன் பிறகு வா்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற வேண்டும் என்று அந்த இயக்குநரகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com