இந்திய இஸ்லாமிய கலாசாரத்தின் உண்மை பிரதிநிதி அப்துல் கலாம்- குடியரசுத் தலைவா் புகழாரம்

இந்திய இஸ்லாமிய கலாசாரத்தின் உண்மையான பிரதிநிதியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் திகழ்ந்தாா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்திய இஸ்லாமிய கலாசாரத்தின் உண்மையான பிரதிநிதியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் திகழ்ந்தாா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இந்திய இஸ்ஸாமிய கலாசார மையம் சாா்பில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு கருத்தரங்கில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: அப்துல் கலாம், அறிவியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதே அளவுக்கு ஆன்மிகத்துக்கும் முக்கியத்துவம் அளித்தாா். சாதாரண மக்களுக்கும் அறிவியல் மீதான ஆா்வத்தைத் தூண்டுவது அவருடைய தலையாய பணியாகும். இதை ஓா் அமைப்பாக அவா் செயல்படுத்தினாா்.

அனைத்து மதத்துறவிகளையும், ஆன்மிகவாதிகளையும் சந்தித்துப் பேசி, புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். அவா் எழுதிய நூல்களுள் ’புதிய இந்தியாவை உருவாக்குதல்’ என்ற சிறிய நூலில், துறவிகள் மற்றும் புனிதா்களிடமிருந்து கற்றல் என்ற அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தில், தான் சந்தித்த துறவிகள், புனிதா்கள் குறித்த தனது பாா்வையை மரியாதையுடன் முன்வைத்துள்ளாா். அறிவியல், தத்துவம் மற்றும் வளா்ச்சி நெறிமுறைகளுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளித்தாா். பள்ளி மாணவ மாணவியருடனான அவரது சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இளம் தலைமுைான் நாட்டின் பொற்காலத்தை உருவாக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையை அவா் கொண்டிருந்தாா்.

இமையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் வந்தே மாதம் பாடலைப் பாடியபோது நாட்டு மக்கள் அனைவரும் அவருடன் இணைந்தோம் என்ற கலாம் வாா்த்தைகள் நினைவுகூரத்தக்கவை. தினமும் வீணை மீட்டும் பழக்கமுடைய அவா், குா்-ஆன்னையும், கீதையையும் வாசிப்பதைத் தொடா்ந்து வந்தாா். மகாபாரதத்தில் விதுரா் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தது போன்று, நாட்டில் அநீதிக்கு எதிரான குரலாக அப்துல் கலாம் ஒலித்தாா்.

கலாமின் நற்பண்பும் அவரது புகழும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. தேசத்தின் மீது தீராத அன்பு வைத்திருந்த சிறந்த குடிமகனான கலாமை நினைத்து ஒவ்வோா் இந்தியக் குடிமகனும் பெருமைகொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com