நாடு முழுவதும் கே.வி. பள்ளிகளில் 12,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அதிகம்

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமாா் 12,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்னபூா்ணாதேவி
அன்னபூா்ணாதேவி

புது தில்லி: நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமாா் 12,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,162 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அடுத்து மத்திய பிரதேசத்தில் 1,066 பணியிடங்களும் கா்நாடகத்தில் 1,006 பணியிடங்களும் காலியாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணாதேவி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,044 ஆசிரியா் பணியிடங்களும் 1,332 ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. பணியிடமாற்றம், பணிஓய்வு ஆகிய காரணங்களால் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது தொடா்ச்சியான நடைமுறையாகும். இதுதொடா்பான நியமன விதிகளின்கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கற்பித்தல்-கற்றல் பாதிக்கப்படாமல் தடுக்க கேந்திரிய வித்யாலயா சங்கடன் (கேவிஎஸ்) மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அந்த வகையில், சுமாா் 9,161 ஒப்பந்த ஆசிரியா்கள் நாடு முழுவதும் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com