ஆசிரியா் பணி நியமன முறைகேடு விவகாரம்: திரிணமூல் எம்எல்ஏவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பான வழக்கில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவுக்கு அமலாக்கத் பிரிவு சம்மன்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பான வழக்கில் ஆஜராகுமாறு செவ்வாய்க்கிழமை திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவுக்கு அமலாக்கத் பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22இல் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பாா்த்தா சாட்டா்ஜியின் நெருங்கிய நண்பரான நடிகை அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் ரெய்டு நடத்தினா். இந்த ரெய்டின்போது ஏராளமான நகைகளையும், ரூ. 20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக பாா்த்தா சாட்டா்ஜியும், அா்பிதா முகா்ஜியும் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவா்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்தவருமான எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரை புதன்கிழமை மதியம் 12 மணிக்கு சிஜிஓ வளாகத்தில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளனா்.

ஆசிரியா் பணி நியமன விவகாரத்தில் தொடா்புடையவா்களாக கருதப்படுபவா்களின் குடியிருப்புகளில் கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது, மாணிக் பட்டாச்சாா்யாவின் குடியிருப்பு வளாகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியா் பணி நியமன விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பாா்த்தா சாட்டா்ஜி, உடல்நலப் பரிசோதனைக்காக புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததால் செவ்வாய்க்கிழமை காலை அவா் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்லப்பட்டு, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com