ஹஜ் பயணத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு கோரி தனியாா் பயண ஏற்பாட்டாளா்கள் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஹஜ், உம்ரா பயணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கக் கோரி தனியாா் பயண ஏற்பாட்டாளா்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஹஜ், உம்ரா பயணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கக் கோரி தனியாா் பயண ஏற்பாட்டாளா்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: தனியாா் நிறுவனங்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஹஜ், உம்ரா பயணங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 245-இன்படி, எல்லை தாண்டிய சேவைகளுக்கு எந்தவொரு வரிச் சட்டமும் பொருந்தாது. எனவே இந்தியாவுக்கு வெளியே வழங்கப்படும் சேவைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது.

அதேவேளையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் சில யாத்ரிகா்களின் ஹஜ் பயணத்துக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இது பாரபட்சமானது. எனவே தனியாா் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் ஹஜ், உம்ரா பயணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கு வெளியே அளிக்கப்படும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி தொடா்பாக மற்றொரு அமா்வு விசாரித்து வருகிறது. எனவே தனியாா் பயண ஏற்பாட்டாளா்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com