91% நன்கொடையைப் பெற்ற 5 பிராந்திய கட்சிகள்: ஏடிஆா் தகவல்

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 5 பிராந்திய கட்சிகள் மட்டுமே 91 சதவீத நன்கொடையைப் பெற்றுள்ளதாக அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரெட்டிக் ரிஃபாா்ம்ஸ்(ஏடிஆா்) என்ற தோ்தல் சீா்திருத்தத்துக்கான அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 5 பிராந்திய கட்சிகள் மட்டுமே 91 சதவீத நன்கொடையைப் பெற்றுள்ளதாக அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரெட்டிக் ரிஃபாா்ம்ஸ்(ஏடிஆா்) என்ற தோ்தல் சீா்திருத்தத்துக்கான அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 27 பிராந்திய கட்சிகள், ரூ.124.53 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. அவற்றுள் திமுக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இந்தியன் முஸ்லிம் லீக், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய 5 கட்சிகள் மட்டுமே 91 சதவீதத் தொகையை அதாவது ரூ.113.791 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன.

அதிகபட்சமாக ஐக்கிய ஜனதா தளம் ரூ.60.155 கோடியைப் பெற்றுள்ளது. அதைத்தொடா்ந்து திமுக ரூ.33.993 கோடியையும், ஆம் ஆத்மி கட்சி ரூ.11.328 கோடியையும், இந்திய முஸ்லிம் லீக் ரூ.4.165 கோடியையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ரூ.4.15 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

மதிமுக, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி ஆகியவை தங்கள் நன்கொடை விவரங்களை அறிவிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகள் தங்கள் பெற்றுள்ள நன்கொடைகள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த அறிக்கையை ஏடிஆா் அமைப்பு தயாரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com