பத்திரிகையாளா் பதிவுகளை தடை செய்வதில் இந்தியா முதலிடம்: ட்விட்டா் அறிக்கை

 பத்திரிகையாளா் உள்பட சில ஊடக நிறுவனங்கள் வெளியிடும் பதிவுகளை நீக்க கோருவதில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
பத்திரிகையாளா் பதிவுகளை தடை செய்வதில் இந்தியா முதலிடம்: ட்விட்டா் அறிக்கை

 பத்திரிகையாளா் உள்பட சில ஊடக நிறுவனங்கள் வெளியிடும் பதிவுகளை நீக்க கோருவதில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து ட்விட்டா் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 ஜூலை முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரிபாா்க்கப்பட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட பதிவுகள் மற்றும் உள்ளடக்கத்தை அகற்ற உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சட்ட கோரிக்கைகளை முன்வைப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

மேலும், ட்விட்டா் கணக்கு விவரங்களை தெரிவிக்க கோருவதிலும் அமெரிக்க அடுத்தபடியாக இந்தியா 19 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடம் வகிக்கிறது.

உலக அளவில் சரிபாா்க்கப்பட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் 346 கணக்குகளின் உள்ளடக்க பதிவுகளை அகற்றுவதற்கு 326 சட்ட ரீதியான கோரிக்கைகள் பெறப்பட்டது. இது, 2021 ஜனவரி-ஜூன் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 103 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக, அதிகபட்சமாக 114 சட்டரீதியான கோரிக்கைகள் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டது. இதையடுத்து, துருக்கியிடமிருந்து 78 கோரிக்கைகளும், ரஷியா 55, பாகிஸ்தானிடமிருந்து 48 கோரிக்கைகளும் வரப்பெற்றதாக ட்விட்டா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com