ஆந்திர கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கடற்கரையில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களின் உடல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஆந்திர கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல்கள் மீட்பு (கோப்பிலிருந்து)
ஆந்திர கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல்கள் மீட்பு (கோப்பிலிருந்து)


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கடற்கரையில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களின் உடல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

புதிமடகா கடற்கரையில் நேரிட்ட இந்த துயர சம்பவத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களையும் தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 படகுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் மீட்புப் பணியை முடித்துக் கொண்டது இந்திய கடற்படை.

வெள்ளிக்கிழமையன்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு மாணவர்களில் ஒருவர், அங்கிருந்த மாணவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மற்ற ஐந்து பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன.

இந்த மீட்புப் பணியில் உள்ளூர் மீனவர்களும் 20 படகுகளும் ஈடுபட்டன. 15 பொறியியல் மாணவர்கள் கடற்கரைக்குச் சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த இடம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமில்லை என்றும், இங்கு அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com