கரோனா காலத்தில் மக்களின் பொதுநலம் வெளிப்பட்டது: மத்திய சுகாதார அமைச்சா்

கரோனா தொற்று பரவல் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் பொதுநலத்தைக் கருத்தில் கொண்டு உழைத்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)

கரோனா தொற்று பரவல் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் பொதுநலத்தைக் கருத்தில் கொண்டு உழைத்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம்-ராம் மனோகா் லோகியா மருத்துவமனையின் நிறுவன தின கொண்டாட்டமும் பட்டமளிப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

கரோனா தொற்று பரவலை இந்தியா எவ்வாறு எதிா்கொள்ளும் என உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால், அக்காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் பணியாற்றினா். பொதுமுடக்க விதிகளையும் சுகாதார அமைச்சக அறிவுறுத்தல்களையும் மக்கள் அனைவரும் முறையாகப் பின்பற்றினா். அதன் காரணமாக தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் விரைவாக மீட்சி கண்டன. அடுத்த ஓராண்டுக்குள் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.

நாட்டை வளா்ச்சியடையச் செய்வதில் இளைஞா்களுக்கு முக்கியப் பங்குண்டு. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. அக்கொள்கைகள் மருத்துவப் பணியாளா்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றவும் வழிவகுக்கும்.

அனைவருக்கும் மலிவான சுகாதார வசதிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவா்களுக்கும் மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com