மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் கூவத்தூர் ஃபார்முலா

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை உதய்பூரிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்க கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் கூவத்தூர் ஃபார்முலா


மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை உதய்பூரிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்க கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"எம்எல்ஏ-க்கள் உதய்பூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலர் இன்று செல்கின்றனர். மற்றவர்கள் நாளை உதய்பூர் சென்றடையவுள்ளனர்."

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தவிர்த்து சுயேச்சை எம்எல்ஏ-க்கள் மற்றும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்களும் உதய்பூருக்கு மாற்றப்படவுள்ளனர். கடந்த மாதம் காங்கிரஸ் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடைபெற்ற அதேவிடுதியில் எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதன்மூலம், 4-இல் 2 இடங்களை காங்கிரஸால் கைப்பற்ற முடியும். இரண்டு இடங்களைக் கைப்பற்றிய பிறகு கூடுதலாக 26 வாக்குகள் இருக்கும். ஆனால், மூன்றாவது இடத்தை வெல்வதற்கு 41 வாக்குகள் தேவை.

பாஜகவிடம் 71 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதைக் கொண்டு ஒரு இடத்தை வெல்ல முடியும். இதன்பிறகு, கூடுதலாக 30 வாக்குகள் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com