மாநிலங்களவைத் தோ்தல்:பாஜக பொறுப்பாளா்களாக 4 மத்திய அமைச்சா்கள்

15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலில், பாஜக சாா்பில் பொறுப்பாளா்களாக 4 மத்திய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலில், பாஜக சாா்பில் பொறுப்பாளா்களாக 4 மத்திய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து 8 போ், மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகத்தில் இருந்து தலா மூவா், பிகாா் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா இருவா், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட் மற்றும் ஹரியாணாவிலிருந்து தலா ஒருவா் என பாஜக சாா்பில் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இது தவிர இரு சுயேச்சை வேட்பாளா்களும் பாஜக ஆதரவுடன் களத்தில் உள்ளனா். ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் மாநிலங்களவைத் தோ்தல் பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ஹரியாணாவுக்கு மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், மகாராஷ்டிரத்துக்கு மத்திய அமைச்சா் அஷ்வின் வைஷ்ணவ், கா்நாடக மாநில பொறுப்பாளராக அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாஜகவின் முக்கிய வேட்பாளா்களான மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன் கா்நாடகத்தில் இருந்தும், பியூஷ் கோயல் மகாராஷ்டிரத்தில் இருந்தும் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com