ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் முதலிடம்

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் முதலிடம்
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் முதலிடம்


மும்பை: இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழும நிர்வாகி கௌதம் அதானியை பின்னிக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்களுக்கான குறியீட்டுப் பட்டியலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.07 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலர்களாக உள்ளன.

இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலகளவில் மிகப் பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.  கௌதம் அதானி ஆசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு அடுத்து ஒன்பதாவது இடத்திலும் உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் லாபம் அதிகரித்ததே இந்த மாற்றத்துக்குக் காரணம். அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை உயர்வால் சில மாதங்கள் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் வகித்து வந்தது  குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com