‘தன்னை கொல்ல சதி’: விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் அச்சம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் அச்சம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவர் ராகேஷ் திகைத். அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராகேஷ் திகைத் மீது கடந்த மே மாதம் 30ஆம் தேதி கர்நாடகத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீரட்டில் நடைபெற்ற கிஷான் பஞ்சாயத்தில் கலந்து கொண்டு பேசிய ராகேஷ் திகைத், “ராகேஷ் திகைத்தின் குடும்பம் விவசாயிகளின் குரலாக எப்போதும் ஒலிக்கும். தொடர்ந்து அதனை நான் செய்வேன். எந்த அழுத்தத்திற்கும் எனது குடும்பம் அடிபணியாது” எனத் தெரிவித்தார்.

மேலும் கர்நாடகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் திட்டமிட்ட ஒன்று எனத் தெரிவித்த ராகேஷ் திகைத் மறைந்த  முன்னாள் ராணுவத் தளபதி விபின் ராவத் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க மத்திய அரசு சதி செய்வதாக ராகேஷ் திகைத் குற்றம் சுமத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com