சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா ஆதரவு

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை (லைஃப்)’ என்ற சா்வதேச இயக்கத்தைப் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தாா். சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவா் பில் கேட்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்போா், பூமிக்கு ஆதரவாகச் செயல்படுவோா் ஆவா். எதிா்காலத்தை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். ‘ஒரே பூமி, பல்வேறு முயற்சிகள்’ என்ற கொள்கையை மையமாகக் கொண்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

கரியமில வாயு சாராத வாழ்க்கை முறை குறித்து மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினாா். சுற்றுச்சூழல் சாா்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் வேளையில், நீடித்த வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் மனிதா்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com