அசாமில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 56.49 % தேர்ச்சி

அசாமில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எச்எஸ்எல்சி தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி 56.49 சதவீதமாக உள்ளது. 

இந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவிகளை விட 4.31 சதவீத மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மொத்தம் 4,05,582 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். 

அதில் 2,29,131 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 65,175 மாணவர்கள் முதல் இடத்தையும், 99,854 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 64,101 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேலும், 8,373 மாணவர்கள் (510க்கு மேல்) மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 14,047 பேர் 450-க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 

லக்கிம்பூர் மாவட்டத்தில், செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியின் ரக்டோத்பால் சைகியா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், நல்பாரி லிட்டில் பிளவர்ஸ் பள்ளியைச் சேர்ந்த புயாஷி மேதி மொத்தம் 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com