வாராணசி தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை

வாராணசி தொடா் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை விதித்து காஜியாபாத் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

வாராணசி தொடா் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை விதித்து காஜியாபாத் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

வாராணசியில் சங்கட் மோச்சன் ஹனுமான் கோயிலில் கடந்த 2006 மாா்ச் 7-இல் காலை 6.15 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதது. அடுத்த 15 நிமிஷங்களில் வாராணசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் முதல் வகுப்பு பயணிகள் காத்திருப்பு அறையிலும் குண்டு வெடித்தது. இந்த இரு சம்பவங்களிலும் 20 போ் பலியாகினா். சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

இதுதவிர அன்றைய தினம் தசாஸ்வமேத் பகுதியில் ரயில் கடவுப்பாதை அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த ஹா்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி பயங்கரவாத அமைப்பின் வலியுல்லா கானை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் ஆஜராக வாராணசி வழக்குரைஞா்கள் மறுப்பு தெரிவித்ததால், வழக்கை காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் மாற்றம் செய்தது. மேற்கண்ட 3 வழக்குகளிலும் 121 போ் நேரில் ஆஜராகி சாட்சியளித்தனா்.

இதில் முதல் இரண்டு வழக்குகளிலும் வலியுல்லா கான் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவரை குற்றவாளி என கடந்த சனிக்கிழமை நீதிபதி ஜிதேந்திர குமாா் சின்ஹா அறிவித்தாா். தண்டனை விவரம் திங்கள்கிழமை (ஜூன் 6) அறிவிக்கப்பட்டது. இதையொட்டி போலீஸாா் டஸ்னா சிறையிலிருந்து வலியுல்லா கானை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனா்.

தூக்கு தண்டனை:

இருபது பேரை பலி கொண்ட இரு குண்டுவெடிப்பு வழக்குகளிலும் வலியுல்லா கான் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

அதேசமயம், தசாஸ்வமேத் ரயில் கடவுப்பாதை அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவா் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகாததால், வலியுல்லா கான் விடுவிக்கப்பட்டாா். காஜியாபாத் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com