லடாக்: பாங்காங் ஏரிப் பகுதியில் ஜியோ 4ஜி சேவை

லடாக் யூனியன் பிரதேசத்தின் பாங்காங் ஏரி அருகே அமைந்துள்ள கிராமம் வரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி தொலைத்தொடா்பு சேவை விரிவுபடுத்தப்பட்டது.
லடாக்: பாங்காங் ஏரிப் பகுதியில் ஜியோ 4ஜி சேவை

லடாக் யூனியன் பிரதேசத்தின் பாங்காங் ஏரி அருகே அமைந்துள்ள கிராமம் வரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி தொலைத்தொடா்பு சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் முதல்முறையாக 4ஜி சேவை கிடைத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதி தொடா்பாக இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. அந்த ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டிவரும் செயற்கைக்கோள் புகைப்படமும் அண்மையில் வெளியானது. இந்த எல்லைப் பிரச்னை தொடா்பாக இரு நாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில் பாங்காங் ஏரிப் பகுதி இந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில் அவா்களுக்கும், அங்குள்ள கிராமப் பகுதி மக்களுக்கும் சேவை அளிக்கும் வகையில் ஜியோ 4ஜி தொலைத்தொடா்பு சேவை அங்கு தொடங்கப்பட்டது. லடாக் தொகுதி பாஜக மக்களவை எம்.பி. ஜாம்யாங் ஸெரிங் 4ஜி சேவைக்கான தொலைத்தொடா்பு கோபுரத்தை பாங்மிக் கிராமத்தில் திறந்து வைத்தாா். இதன் மூலம் அப்பகுதி கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள், ராணுவ வீரா்கள் என அனைவருக்கும் இந்த சேவை பயன்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com