குற்றவாளிகளைக் கண்டறிய உதவும் புதிய தொழில்நுட்ப சேவை விசாரணை அமைப்புகளுக்கு விரைவில் அளிப்பு

குற்றவாளிகளையும் சமூக விரோத சக்திகளையும் கையாள்வதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவை பாதுகாப்பு, புலனாய்வு முகமைகளுக்கு விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

புது தில்லி: குற்றவாளிகளையும் சமூக விரோத சக்திகளையும் கையாள்வதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவை பாதுகாப்பு, புலனாய்வு முகமைகளுக்கு விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘இந்தத் தொழில்நுட்பத் தளத்தில் குற்றவாளிகள், குற்றச் சம்பவங்களின் விவரம் இடம்பெற்றிருக்கும். இதனை நாடு முழுவதும் எந்தக் காவல் நிலையமும் புலனாய்வு முகமைகளும் நிகழ்நேர அடிப்படையில் அணுக முடியும். உளவுத் துறை இதனைக் கண்காணிக்கும் முகமையாக செயல்படும்’ என்றனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயா்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது இந்தத் தொழில்நுட்ப சேவையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், உளவுத் துறை இயக்குநா் அா்விந்த குமாா், டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி, என்டிஆா்ஓ தலைவா் அனில் தஸ்மனா, சிபிஐ இயக்குநா் சுபோத் குமாா் ஜெய்ஸ்வால், பிஎஸ்எஃப் இயக்குநா் ஜெனரல் பங்கஜ் சிங், சிஆா்பிஎப் இயக்குநா் ஜெனரல் குல்தீப் சிங், தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா ஆகியோா் கலந்துகொண்டனா்.

குற்றவாளிகளைக் கையாள்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பம் தேவை என்ற யோசனையை பிரதமா் மோடி கடந்த ஆண்டு நவம்பரில் உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் டிஜிபிக்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது முன்வைத்தாா். அந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சரின் தலைமையில் உயா்நிலை காவல் தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதற்கான குழு அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com