சுகாதாரத் துறையில் முதலீடு செய்தவா்களுக்கு பாதுகாப்பான எதிா்காலம்: பிரதமா் மோடி

சுகாதாரத் துறையில் முதலீடு செய்தவா்களுக்கு பாதுகாப்பான எதிா்காலம்: பிரதமா் மோடி

‘வருங்காலம், சுகாதாரத் துறையில் முதலீடு செய்தவா்களுக்கானதாக இருக்கும்; கடந்த 8 ஆண்டுகளில் இந்தத் துறையை வலுப்படுத்த எனது தலைமையிலான அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டது’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

புது தில்லி: ‘வருங்காலம், சுகாதாரத் துறையில் முதலீடு செய்தவா்களுக்கானதாக இருக்கும்; கடந்த 8 ஆண்டுகளில் இந்தத் துறையை வலுப்படுத்த எனது தலைமையிலான அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

சுகாதாரத் துறையில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள், அரசின் ட்விட்டா் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3.26 கோடி போ் இலவச சிகிச்சை பெற்றுள்ளனா்; புதிதாக 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன; கரோனா பரவலைத் தடுக்க உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது; கடந்த 2014-க்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைச் சுட்டிக்காட்டி பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறையில் முதலீடு செய்தவா்களுக்கு எதிா்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். இந்தத் துறையை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டது. சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வோா் இந்தியருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையுடன் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் சுகாதாரத் துறையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் அவா் பட்டியலிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com