இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் ப.சிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் எந்தத் தகவலும் முழுமையாக இருக்காது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இப்போது, அடுத்த கட்டமாக எதிா்க் கருத்துகளை ஏற்க மறுப்பதே தங்கள் ஆட்சியின் பிரதான கொள்கை என்பதை மீண்டும் அரசு நிரூபித்துள்ளது. எனவேதான் சுற்றுச்சூழல் ஆய்வு மூலம் வெளியான இந்தியாவின் மோசமான நிலையை, உண்மையல்ல என்று கூறி அரசு மறுத்துள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மத்திய அரசு கூறுவதைவிடப் பல மடங்கு அதிகம் என்ற உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஹெச்ஓ) புள்ளி விவரத்தையும் மத்திய அரசு நிராகரித்தது என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.