கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்

ஹரியாணாவில் மாநிலங்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
படம்: ட்விட்டர் | குல்தீப் பிஷ்னாய்
படம்: ட்விட்டர் | குல்தீப் பிஷ்னாய்


ஹரியாணாவில் மாநிலங்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கெனுக்கு வாக்களிக்காமல், பாஜக மற்றும் ஜேஜேபி கூட்டணி ஆதரிக்கும் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்துள்ளார்.

ஹரியாணாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு, கட்சியிலுள்ள 31 எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க வேண்டும். ஆனால், இவர் கட்சி மாறி வாக்களித்துள்ளார், மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் தற்போதைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் குல்தீப் பிஷ்னாய் நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்தீப் பிஷ்னாய் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com