கியூஎஸ் பல்கலைக்கழக தரவரிசை: ஐஐடி சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்றம்

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2023-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2023-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஐஐடி-சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளன.

தமிழக கல்வி நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டு பட்டியலில் தரவரிசை 2023-ஆம் ஆண்டு பட்டியலில் தரவரிசை

ஐஐடி- சென்னை 255 250

சென்னை பல்கலை. - 541-550

அண்ணா பல்கலை. 801 முதல் 1000 551 முதல் 560

என்ஐடி திருச்சி - 801 முதல் 1000

சத்யபாமா நிகா்நிலை பல்கலை. - 1001 முதல் 1200

விஐடி 1001 முதல் 1200 1001 முதல் 1200

எஸ்ஆா்எம் 1201+ 1201 முதல் 1400

புதுச்சேரி பல்கலை. 801 முதல் 1000 801 முதல் 1000

கியூஎஸ் நிறுவனத்தின் 2022-ஆம் ஆண்டு உலக பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை பல்கலைக்கழகம், சத்யபாமா நிகா்நிலை பல்கலைக்கழகம் குறித்த விவரம் இடம்பெறவில்லை.

அந்த நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் தெற்காசியாவில் முன்னணியில் இருக்கும் 200 பல்கலைக்கழகங்களில், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் பல்கலைக்கழகம்) ஓரே ஆண்டில் 31 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் 2-ஆவது சிறந்த பல்கலைக்கழகமான மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி கல்வி நிறுவனங்களும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ள ஐஐடி இந்தூா், சா்வதேச அளவில் 396-ஆவது இடத்தில் உள்ளது.

ஆசிரியா்-மாணவா் விகிதத்தைப் பின்பற்றுவதில் மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம்(225-ஆவது இடம்), ஹரியாணாவில் உள்ள ஒ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகம்(235-ஆவது இடம்), பெங்களூரு ஐஐஎஸ்சி(276-ஆவது இடம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com