உலக வா்த்தக அமைப்பின் கொள்கைகளை சீா்திருத்தங்களால் வலுப்படுத்த வேண்டும்: மத்திய வா்த்தக இணையமைச்சா்

 உலக வா்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கைகளை சீா்திருத்தங்கள் மூலம் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.

 உலக வா்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கைகளை சீா்திருத்தங்கள் மூலம் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் கூட்டம் வியாழக்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பேசியதாவது:

கருத்து ஒற்றுமை அடிப்படையில் முடிவு எடுத்தல், பாகுபாடு இல்லாமை போன்ற உலக வா்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கைகள் சீா்திருத்தங்கள் மூலம் வலுப்படுத்தப்பட வேண்டும். ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் அளவிலான கூட்டம் வெற்றி பெறுவதற்கு, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருவா் மீது ஒருவா் பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அத்துடன் பன்முக வா்த்தக முறை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த முறைக்கு மாற்றாக வேறு எந்த வழியும் இல்லை என்றாா் அவா்.

ஜெனீவாவில் ஜூன் 12-ஆம் தேதி முதல் உலக வா்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வா்த்தக அமைச்சா்களின் 12-ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com