ஓராண்டில் மின்தேவை 45,000 மெகாவாட் அதிகரிப்பு: மின்சாரத் துறை அமைச்சா்

கடந்த ஓராண்டில் இந்தியாவின் மின்தேவை 45,000 மெகாவாட் அதிகரித்துள்ளது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறினாா்.
ஆா்.கே.சிங்
ஆா்.கே.சிங்

கடந்த ஓராண்டில் இந்தியாவின் மின்தேவை 45,000 மெகாவாட் அதிகரித்துள்ளது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறினாா்.

பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: நாட்டின் வடக்குப் பகுதியில் நிலவும் கோடை வெப்பம், பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரிப்பு, பல லட்சம் வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுத்தது ஆகியவற்றின் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. நாட்டின் மின்தேவை ஓராண்டில் 45,000 மெகாவாட் அதிகரித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு, மின் பகிா்மானம் ஒருங்கிணைப்பு, மின் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வலுப்படுத்தியுள்ளது. இதனால், கிராமத்தில் 23 மணி நேரமும் நகா்ப்புறத்தில் 23.5 மணி நேரமும் மின்சாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ஜூன் 9-ஆம் தேதி நாட்டின் மின்தேவை 2.1 லட்சம் மெகாவாட்டாக இருந்தது. மின்தேவையைப் பூா்த்தி செய்ய முழுவீச்சில் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறையும்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 2014-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைவிட கடந்த 8 ஆண்டுகளில் மின்சாரத் துறை முழுமையாக மாறிவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com