ஞானம், கர்மம், பக்தியின் கலவையே யோகா: பிரதமர் மோடி

யோகா என்பது ஞானம், கர்மம், பக்தி ஆகியவற்றின் சரியான கலவையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
ஞானம், கர்மம், பக்தியின் கலவையே யோகா: பிரதமர் மோடி

யோகா என்பது ஞானம், கர்மம், பக்தி ஆகியவற்றின் சரியான கலவையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

ஞானம், கர்மம், பக்தி ஆகியவற்றின் சரியான கலவையே யோகா என்றும் வேகமான உலகில் யோகா மிகவும் முக்கியம். தேவையான அமைதியை வழங்குகிறது என்றார். 

நமது அன்றாட வாழ்வில் யோகா என்ற படத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக யோகா உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் யோகாவை வழக்கமாகப் பயிற்சி செய்து, அது அவர்களுக்கு எப்படி உதவியது என்பதைப் பற்றியும் பேசுகிறார்கள் என்று அவர் கூறினார். 

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்குமாறும், யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுமாறும் பிரதமர் அனைவரையும் வலியுறுத்தினார். 

வரும் நாள்களில் உலகம் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும். யோகா தினத்தைக் கொண்டாடவும், யோகாவை உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றவும் நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் நன்மைகள் ஏராளம் என்று அவர் கூறினார். 

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூருவில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு மோடி தலைமை தாங்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com