3000-ஐ தாண்டிய தினசரி கரோனா: அச்சத்தில் கேரள மக்கள்

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கேரளத்தில் கரோனா வழக்குகள் படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஜூன் 15 வரை மொத்த பாதிப்பு 6,58,9,307 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த இறப்புகள் 69,853 ஆக உள்ளது. 

கேரளத்தில் கரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு முன்னெச்சரிக்கை அளவுகளை வழங்க ஜூன் 16 முதல் 6 நாள்களுக்கு சிறப்புத் தடுப்பூசி முகாம் தொடங்கப்படுகிறது. 

இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக யாரும் நம்பி, முன்னெச்சரிக்கை தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டாம். 

60 வயதுக்கு மேற்பட்ட நோய்த்தடுப்பு சிகிச்சையில் உள்ளவர்கள், முதியோர் இல்லங்களில் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்தை வீட்டிலேயே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கரோனா அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியே கடைப்பிடிப்பது அவசியம். 

அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com