புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை 2,200 ஆக அதிகரிப்பு: அதிரடி அறிவிப்பு

வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவ
கோப்புப்படம்
கோப்புப்படம்


வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகைக்கான கட்டணம் ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின்  ஒவ்வொரு புதிய இணைப்புக்கான வைப்புத் தொகை கட்டணம் ரூ.1,450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், புதிய இணைப்பு வாங்கும் போது இரண்டு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.4,400 வைப்புத் தொகை செலுத்த  வேண்டும். அதாவது வாடிக்கையாளர்கள் தலா 14.2 கிலோ எடை கொண்ட  இரண்டு சிலிண்டர்களை வாங்கும்போது கூடுதலாக ரூ.1500 செலுத்த வேண்டும்.

அதேபான்று, 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கான காப்புத் தொகை ரூ.800 இல் இருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதிய இணைப்புக்கும் வரும் பைப் மற்றும் பாஸ்புக்கிற்கு முறையே ரூ.150 மற்றும் ரூ.25 செலுத்த வேண்டும்.

மேலும், சிலிண்டர் அடுப்புக்கான ரெகுலேட்டர் விலையும் ரூ.150 இல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தொடரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com