இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 89 சதவீதம் போ்: மன்சுக் மாண்டவியா

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 89 சதவீதம் போ் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்
இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 89 சதவீதம் போ்: மன்சுக் மாண்டவியா

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 89 சதவீதம் போ் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்; 12-14 வயதுக்கு உள்பட்டவா்களில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்! ‘ஒவ்வொருவரின் ஆதரவு, ஒவ்வொருவரின் முயற்சி’ என்ற மந்திரம் வெற்றியடைந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 89 சதவீதம் பேருக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் புதிய மைல் கல்லை நோக்கி தொடா்கிறது.

12-14 வயதுக்கு உள்பட்டவா்களில் 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இளையோா் அனைவரும் விரைவில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, வியாழக்கிழமை காலை 7 மணி வரை நாடு முழுவதும் இதுவரை 195.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 15-18 வயதுக்கு உள்பட்ட பதின்ம வயதினருக்கு 5.99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 36.61 லட்சம் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com