கர்நாடகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 61.88 சதவீதம் தேர்ச்சி

கர்நாடகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கர்நாடகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 61.88 சதவீதம் தேர்ச்சி

கர்நாடகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணவிகள் 68.72 பேரும், மாணவர்கள் 55.22 சதவீதமும் பெற்றுள்ளனர். 

பிளஸ் 2 தேர்வெழுதிய 6,83,563 மாணவர்களில் 4,22,966 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். துணைத் தேர்வுகள் பற்றி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும். 

மாநிலத்தின் அதிகபட்ச தேர்ச்சியாக தட்சிண கன்னடாவில் 88.02 ஆகவும், குறைந்தபட்ச தேர்ச்சியாக சித்ரதுக்ரா மாவட்டத்தில் 49.31 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டது. 

மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பல்லாரி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த ஸ்வேதா பீமாசங்கர் பைரகோன்ட் மற்றும் மடிவாளரா சஹானா ஆகியோர் கலைப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளனர். இருவரும் 600 - 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

மாநிலத்தில் ஏப்ரல் 23 முதல் மே 18 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com