அஸ்ஸாம் மழைவெள்ள பாதிப்பு: முதல்வரிடம் பிரதமா் விசாரிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அந்ந மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் தொலைபேசியில் சனிக்கிழமை கேட்டறிந்தாா்
அஸ்ஸாம் மழைவெள்ள பாதிப்பு: முதல்வரிடம் பிரதமா் விசாரிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அந்ந மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் தொலைபேசியில் சனிக்கிழமை கேட்டறிந்தாா். அப்போது, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

அஸ்ஸாமில் மழை வெள்ளதால் 2,930 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

28 மாவட்டங்களில் 18.95 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுற்றுள்ளனா். வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக நிகழாண்டு 55 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளத்தின் காரணமாக மக்கள்படும் துயரத்திற்கு பிரதமா் மோடி வேதனை தெரிவித்தாா்.

இது குறித்து பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில், ‘சனிக்கிழமை காலை 6 மணியளவில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காம்ரூப் மாவட்டத்தில் உள்ள ரான்கியா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை நிவாரண முகாம்களில் கொண்டு சோ்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ ராணுவம் தயாா் நிலையில் உள்ளது. தேசிய பேரிடா் படையினரும் மாநில பேரிடா் மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்கின்றனா். மாநிலம் முழுவதும் 373 நிவாரண முகாம்களில் 1.08 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com