ஏர் இந்தியா 300 ஜெட் விமானங்களை வாங்க மெகா திட்டம்

ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறிய வகை ஜெட் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், வர்த்தக ரீதியான விமான வரலாற்றில் ஒரு நிறுவனம் 300 விமானங்களை வாங்க இருப்பது இதுவே முதல்முறை
ஏர் இந்தியா 300 ஜெட் விமானங்களை வாங்க மெகா திட்டம்


ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறிய வகை ஜெட் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், வர்த்தக ரீதியான விமான வரலாற்றில் ஒரு நிறுவனம் 300 விமானங்களை வாங்க இருப்பது இதுவே முதல்முறை என்றும், இது ஏர் இந்தியாவின் மெகா திட்டம் என்று கூறப்படுகிறது. 

விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320நியோ ஃபேமிலி ஜெட் விமானங்கள் அல்லது போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்யலாம் அல்லது இரண்டின் கலவையாகவும் இருக்கலாம் எனவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், 300 ஜெட் விமானங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமானதாக இருக்கலாம் என்றும், இருப்பினும் இதுபோன்ற பெரிய கொள்முதல்களில் தள்ளுபடிகள் பொதுவானவை. 

300 ஜெட் விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

ஏர்பஸ் ஒரு மாதத்தில் சுமார் 50 ஜெட் விமானங்களை உற்பத்தி செய்கிறது, 2023 ஆம் ஆண்டின் மத்தியில் அதை 65 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 75 ஆகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஏர்பஸ் பிரதிநிதி ஒருவர், நிறுவனம் எப்பொழுதும் இருக்கும் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளது, ஆனால் எந்த விவாதமும் ரகசியமானது என்று கூறினார். 

ஏர் இந்தியாவின் உரிமையாளரான டாடா குழுமம், புதுதில்லியில் இருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை பறக்கும் திறன் கொண்ட ஏர்பஸ் ஏ350 நீண்ட தூர ஜெட் விமானங்களுக்கான ஆர்டரை நெருங்கிவிட்டதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. 

அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வாங்கிய டாடா குழுமம், அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஓவ்வொரு அடியாக எடுத்து வைத்து செயல்படுத்தி வருகிறது. 

நான்கு ஏர்லைன் பிராண்டுகள் உள்பட அதன் விமான வர்த்தகங்களை ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமானங்களுக்கான ஆர்டர், குறிப்பாக நீண்ட கால பராமரிப்புக்கான சாதகமான விதிமுறைகளுடன், செலவுகளைக் குறைக்கவும், மிகவும் மலிவான கட்டணங்களை வழங்கும் விமான சேவை போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. 

தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் முதல் விமான ஆர்டராக இது இருக்கும். ஏர் இந்திய கடைசியாக 2006 ஆம் ஆண்டு விமானம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com