அருணாசலில் வெள்ளம்: ஒருவர் பலி, 3 பேர் மாயம் 

அருணாச்சலப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அருணாசலில் வெள்ளம்: ஒருவர் பலி, 3 பேர் மாயம் 

அருணாச்சலப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். 

ஞாயிறன்று பாபும்பரே மாவட்டத்தில் உள்ள யூபியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 16 வயது சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் ரேஜ் ஹில்லி என அடையாளம் காணப்பட்டான். சைக்கிளில் சென்றபோது, ​​இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேற்கு கமெங் மாவட்டத்தில் இருந்து, ஒரு உணவகத்தில் மூன்று ஊழியர்கள் மாயமாகியுள்ளனர். கலக்டாங் துணைப்பிரிவுக்கு உட்பட்ட அங்கலிங் கிராமத்திற்கு அருகே ஜூன் 18ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்ததாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி மிண்டு யாங்சோம் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 19ல் குருங் குமே மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் இறந்தனர், மேலும் மே 16 அன்று மாநிலத் தலைநகர் இட்டாநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் ஐந்து பேர் இறந்தனர். தொடர் மழையால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிக்கையின்படி, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மாநிலத்தின் 87 கிராமங்களில் 524 வீடுகள் சேதமடைந்துள்ளன, மொத்தம் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சாலை இணைப்பைச் சீரமைக்க நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com