கடன் அட்டை புதிய விதிமுறைகள் 3 மாதங்களுக்கு தள்ளிவைப்பு

வங்கிகள் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

வங்கிகள் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஒப்புதலின்றி கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்ட்) ஆகியவற்றை வழங்கவோ மற்றும் செயல்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விதிமுறையை நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், நிதித் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
 அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் அனைத்தும் நிகழாண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து கடன் மற்றும் பற்று அட்டை தொடர்பான புதிய விதிமுறைகளை கண்டிப்பாக அமலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com