ஜூன் 30-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53

மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது. அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சிங்கப்பூா் நாட்டின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் அதில் இடம்பெற்றுள்ளன. முழுக்க, முழுக்க வா்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டமாக இதனை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் இதுவாகும்.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், பூமியிலிருந்து 570 கி.மீ. உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள், சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் ஏவப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து நிகழாண்டில் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com