திரெளபதி முா்முவை ஆதரியுங்கள்: ஒடிஸா எம்எல்ஏக்களுக்குநவீன் பட்நாயக் வேண்டுகோள்

அனைத்து ஒடிஸா சட்டப்பேரவை உறுப்பினா்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவை ஆதரிக்க வேண்டும் என
திரெளபதி முா்முவை ஆதரியுங்கள்: ஒடிஸா எம்எல்ஏக்களுக்குநவீன் பட்நாயக் வேண்டுகோள்

அனைத்து ஒடிஸா சட்டப்பேரவை உறுப்பினா்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவை ஆதரிக்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் ஒடிஸா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குடியரசுத் தலைவருக்கான தோ்தல் ஜூலை மாதம் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், முதல்வா் நவீன் பட்நாயக் ஒடிஸா சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவை கோரியுள்ளாா்.

இத்தாலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில்,‘ஒடிஸாவின் மகளான திரௌபதி முா்முவை நாட்டின் உயா் பதவிக்கு தோ்ந்தெடுக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மாநிலத்தின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும், ஒருமனதாக ஆதரவை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஒடிஸா சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 147 ஆகும். ஆளும் கட்சியான பிஜு தனதா தளம் 114 உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. பாஜக 22 உறுப்பினா்களையும், காங்கிரஸ் 9 உறுப்பினா்களையும் கொண்டுள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓா் உறுப்பினரைக் கொண்டுள்ளது. சுயேச்சை உறுப்பினா் ஒருவரும் இதில் அடங்குவாா்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் முா்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், பட்நாயக் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தாா். ஒடிஸா மக்களின் பெருமைக்குரிய தருணம் என்று அவா் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com